×

பொன்னேரி துணை மின் நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: சீரான மின் விநியோகம், 110கி.வோ. துணை மின் நிலையமாக தரம் உயர்த்திட வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் அவ்வப்போது சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சீரான மின் விநியோகத்தை வலியுறுத்தி, பொன்னேரி துணை மின் நிலையம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாததால் பராமரிப்பு, பழுது பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறாமல் நுகர்வோர் பாதிப்பிற்கு உள்ளாவதாக குற்றம் சாட்டினர். பழமையான மின் கம்பிகள் காரணமாக அவ்வப்போது அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது, காலாவதியான துணை மின் நிலையத்தை புதிப்பிக்காததால் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

மின் நுகர்வு தேவைக்கேற்ப புதிய மின் சாதனங்களை பொருத்தி மின்தடைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் பழமையான பொன்னேரி துணை மின் நிலையத்தை 110கி.வோ. துணை மின் நிலையமாக தரம் உயர்த்திட வேண்டும். கட்டணத்தை உயரத்தியபோதும் முறையாக மின் கட்டணத்தை செலுத்தி வரும் நுகர்வோருக்கு தடையற்ற மின்சாரம் வழங்கிட தமிழ்நாடு மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், சீரான மின்சாரத்தை வழங்கிட வலியுறுத்தியும், காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

The post பொன்னேரி துணை மின் நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Communist Party ,Dinakaran ,
× RELATED அலுவலக தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்