×

சீரடி சாயி அவதூதர் ஆலயத்தில் பாபாவிற்கு அபிஷேகம், ஹோமம்

பொன்னேரி: ஸ்ரீ சீரடி சாயி அவதூதர் ஆலயத்தில் 7ம் வருட பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு பாபாவிற்கு அபிஷேகம் மற்றும் ஹோமம் நடைபெற்றது. மீஞ்சூர் அடுத்த கே.ஆர்.பாளையம் கிராமத்தில் ஸ்ரீ சீரடி சாய் அவதூதர் ஆலயம் உள்ளது. இங்கு, 7ம் வருட பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு பாபாவிற்கு நேற்றுமுன்தினம் அபிஷேகம் மற்றும் ஹோமம் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை கணபதி ஓமம், நவக்கிரக ஹோமம், சாய்பாபா பிரதிஷ்டா உள்ளிட்ட ஓமங்களுடன் மகா பூர்ண ஆரத்தி மற்றும் பாபாவிற்கு கலசாபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றது.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு உற்சவர் ஊர்வலமும் அதனை தொடர்ந்து தில்லை கூத்தன் நாட்டியப்பள்ளி மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், லட்சுமி சிவமுருகன் யோகா பயிற்சி மைய மாணவர்களின் யோகா சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மீஞ்சூர் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் இந்த பிரதிஷ்டை தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

The post சீரடி சாயி அவதூதர் ஆலயத்தில் பாபாவிற்கு அபிஷேகம், ஹோமம் appeared first on Dinakaran.

Tags : SHIRADI SAI DEVIL ,HOMAM ,Bonneri ,Annunciation Day ,Sri Seeradi Sai Shrine ,Palayam ,Shri Seeradi Chai ,Devadudhar Shrine ,Chiradi Sai ,Baba ,Shrine of the Apostles ,
× RELATED பொன்னேரி தொகுதி மக்களுக்கு விரைவில்...