×

வீட்டின் அருகில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு, நாய் பலி

ஆர்கே பேட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே பாலாபுரம் ஊராட்சி ஆர்ஜே கண்டிகை கிராமத்தில் மின்வாரிய ஊழியர்கள் நேற்றுமுன்தினம் மின் கம்பத்தில் மின் கம்பிகள் மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அன்றிரவு அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன்(40) என்பவரின் வீட்டின் அருகில் மின்கம்பத்தில் இருந்து உயரழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது வீட்டு அருகில் கட்டி வைத்திருந்த பசுமாடு மீது மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கியதில் பசுமாடு துடி துடித்து உயிரிழந்தது. இதன் மதிப்பு சுமார் 50 ஆயிரம் என கூறப்படுகிறது.

மேலும் அதே பகுதியில் நாயும் மின்சாரம் தாக்கி இறந்தது. இது குறித்து ஆனந்தன் ஆர்கே பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கம்பத்திலிருந்து உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் பசுமாடு இறந்த நிலையில் இரவு நேரம் என்பதால் கிராம மக்கள் யாரும் தெருவில் நடமாட்டம் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மின் வாரிய ஊழியர்கள் கவனக்குறைவால் மின்கம்பிகள் முறையாக பொருத்தாததால், அறுந்த விழுந்துள்ளதாக கிராமமக்கள் குற்றம் சாட்டினர்.

The post வீட்டின் அருகில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு, நாய் பலி appeared first on Dinakaran.

Tags : RK Pettai ,RJ Kandikai ,Balapuram panchayat ,Thiruvallur district ,Anandan ,
× RELATED ஆர்.கே.பேட்டையில் குடும்பத் தகராறில்...