×

இன்டீரியர் டிசைனர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

கோவை. ஜூன் 22: கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை பின்புறத்தில் பழைய ஹவுசிங் போர்டு காலனி உள்ளது. இந்த காலனியில் வீடுகள் மோசமான நிலையில் உள்ளதால், அங்கு குடியிருந்த மக்கள் வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர். இந்நிலையில், அங்குள்ள ஒரு வீட்டில் இன்டீரியர் டிசைனராக பணியாற்றும் கார்த்திக் (33) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் கார்த்திக் அவரது மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார்.

மீண்டும் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த கம்மல், பிரேஸ்லெட், வெள்ளி அரைஞாண் கயிறு, வளையல் உள்ளிட்ட மொத்தம் 5 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதுகுறித்து கார்த்தி சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post இன்டீரியர் டிசைனர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Singanallur Farmers Market ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!