×

ராமநாதபுரத்தில் மகளிர் குழுக்களுக்கு ரூ.20 கோடி கடனுதவி

ராமநாதபுரம், ஜூன் 22:ராமநாதபுரத்தில் நேற்று பாங்க் ஆப் இந்தியா மற்றும் தனியார் அமைப்பு சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா நடந்தது. வங்கியின் தலைமை அலுவலக ஊரகத்துறை பொதுமேலாளர் நகுல பெஹரா தலைமை வகித்தார். வங்கியின் சென்னை கள பொதுமேலாளர் முகேஷ் சர்மா முன்னிலை வகித்தார். வங்கியின் மதுரை மண்டல மேலாளர் கிஷோர் குமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பொதுமேலாளர் நகுல பெஹரா பேசுகையில், “பெண்கள் சுய தொழில் செய்து, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். அதனால் தான் வங்கி சுய உதவிக்குழுக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் உள்ளன’’ என்றார். விழாவில் தனியார் அமைப்பைச் சேர்ந்த 600 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. இதில் பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post ராமநாதபுரத்தில் மகளிர் குழுக்களுக்கு ரூ.20 கோடி கடனுதவி appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Bank of India ,Nakula Behera ,General ,Bank ,Chennai ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே...