×

அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வு இணையதளம் மூலம் பதிவு செய்ய அழைப்பு

ஊட்டி,ஜூன்22: நீலகிரி கலெக்டர் அருணா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வு இணையதளம் வாயிலாக 18.10.2024 முதல் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு 8.7.2024 முதல் 28.7.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணைதயளத்தில் பதிவு செய்யலாம்.

இத்தேர்விற்கான கல்வித்தகுதி 12ம் வகுப்பு (அறிவியல் பாடம்) அல்லது மூன்று வருட பட்டய படிப்பு அல்லது தொழில் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் 3.07.2004 லிருந்து 3.01.2008-க்குள் பிறந்திருக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.எனவே, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான பயனாளிகள் இந்த தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் அருணா கூறியுள்ளார்.

The post அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வு இணையதளம் மூலம் பதிவு செய்ய அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Agniveer Vayu Indian Air Force Exam Call for ,Nilgiris ,Collector ,Aruna ,Agniveer Vayu Indian Air Force Exam ,Dinakaran ,
× RELATED தனியார் டாக்சி ஓட்டுநர்கள் மீது...