×

மேலூர் அருகே உலகமாதா கோயில் பால்குட ஊர்வலம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

மேலூர், ஜூன் 22: மேலூர் அருகே உலக மாதா அம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மேலூர் அருகே பூதமங்கலம் ஊராட்சியில் உள்ள அதிகார நாகப்பன் சிவல்பட்டியில், அதிகார கண்மாயில் உள்ளது அன்னை உலக மாதா அம்மன் கோயில். இக்கோயில் மற்றும் பரிவார தெய்வங்களின் 15ம் ஆண்டு பால்குட விழா நேற்று நடைபெற்றது.

முன்னதாக பக்தர்கள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் இருந்து வந்தனர். நேற்று மந்தையில் இருந்து பக்தர்கள் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். பின்னர் உலக மாதாவிற்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோயில் முன்பு அமைக்கப்பட்ட பந்தலில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அதிகார நாகப்பன் சிவல்பட்டி கோயில் விழா கமிட்டியினர் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

The post மேலூர் அருகே உலகமாதா கோயில் பால்குட ஊர்வலம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ulagamata ,Temple Balkuta Procession ,Melur ,Balkuta ,Ulagama Mata Amman ,Achira ,Nagappan ,Sivalpatti ,Boothamangalam Panchayat ,Mellur ,Kanmail Anai ,Ulaga ,Mata Amman Temple ,Ulagamata Temple ,
× RELATED மேலூர் அரசு பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்