×

பெண்ணிடம் நகை திருடியவர் கைது

கோவை. ஜூன் 22:கோவை அருகே உள்ள வீரகேரளம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மலர்க்கொடி (62). சமையல் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மலர்க்கொடி வீட்டு செலவுக்காக 2 பவுன் தங்க செயினை அடகு வைக்க டவுன்ஹால் பகுதிக்கு செல்ல மருதமலை தேவஸ்தானம் பள்ளி பஸ்நிறுத்தம் அருகில் காத்திருந்தார்.

அப்போது அவர் அருகில் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென அவரது நகை இருந்த பையை எடுத்துகொண்டு மாயமாகிவிட்டார். இதுகுறித்து மலர்கொடி அளித்த புகாரின்பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மலர்க்கொடியிடம் செயினை திருடி சென்ற வாலிபரை தேடி வந்தனர். இதனையடுத்து நகை திருடிய சுதாகர் (42) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

The post பெண்ணிடம் நகை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Malarkodi ,Veerakeralam Housing Unit ,Marudamalai Devasthanam ,
× RELATED பெண்ணிடம் நகை திருடியவர் கைது