×

சோமனூரில் போதை மாத்திரை விற்ற வாலிபர் குண்டாசில் கைது

சோமனூர், ஜூன் 22: மதுரை மாவட்டம் கீழநாச்சிகுளம், வடக்கு தெருவை சேர்ந்தவர் மாலிக் பாஷா (26). தற்போது, சோமனூர் செல்வபுரம் காலனி பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அங்கு பதுங்கி இருந்த மாலிக்பாஷாவை பிடித்து விசாரித்ததில் இவர் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டது குறித்து மங்கலம், அனுப்பர்பாளையம், கருமத்தம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பது தெரியவந்தது.

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார்பாடி உத்தரவின் அடிப்படையில் மாலிக்பாஷாவை நேற்று குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தனியார் பள்ளிகள் யோகாவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அரசு பள்ளி மாணவர்களிடம் யோகா கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தாலும், பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் எடுப்பதில்லை. நீட் போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நிலையில் யோகா பயிற்சி மாணவர்களின் மனஅழுத்தம் குறைக்க வழி செய்யும்.

The post சோமனூரில் போதை மாத்திரை விற்ற வாலிபர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Tags : Somanur ,Kundasil ,Malik Pasha ,North Street, Geezanachikulam, Madurai district ,Karumathambatti police station ,Selvapuram Colony ,
× RELATED சென்னை பெண் கொலை வழக்கில் குடியாத்தம் வாலிபர் குண்டாசில் கைது