×

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்கல்

மொடக்குறிச்சி, ஜூன் 22: கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், அவல்பூந்துறை பேரூராட்சி முன்னாள் தலைவரும், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான குணசேகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 46-புதூர் ஊராட்சியில் பச்சப்பாளி, செட்டிபாளையம், ஆனக்கல்பாளையம், 46-புதூர்.

கஸ்பாபேட்டை ஊராட்சிக்குட்பட்ட நாதகவுண்டன்பாளையம், செல்லப்பம்பாளையம், பூலப்பாளையம், கள்ளகவுண்டன்பாளையம், இளையாம்பாளையம். துய்யம்பூந்துறை ஊராட்சிக்குட்பட்ட கிளியம்பட்டி, நல்லான்தொழுவு, சின்னியகவுண்டன்வலசு, மேட்டுப்பாளையம், செங்கோடம்பாளையம், கவுண்டிச்சிபாளையம், நாதகவுண்டன்பாளையம். கனகபுரம் ஊராட்சிக்குட்பட்ட கனகபுரம், வேலம்பாளையம். அவல்பூந்துறை பேரூராட்சிக்குட்பட்ட அவல்பூந்துறை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2500 பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Modakurichi ,Karunanidhi ,Avalpoonthurai Municipality ,
× RELATED சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு