×

மானிய கோரிக்கையை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் முதல்வரிடம் வாழ்த்து

தூத்துக்குடி,ஜூன் 22: சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர் கீதாஜீவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று பேசினார். முன்னதாக மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பதிலுரை அளிக்க இருப்பதை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துபெற்றார். தொடர்ந்து மெரினா கடற்கரையில்உள்ள அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், ராமசுப்பு, தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், டாக்டர் மகிழ்ஜான்ஜீவன் மற்றும் கருணா,மணி,அல்பர்ட், பாஸ்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post மானிய கோரிக்கையை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் முதல்வரிடம் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Minister ,Geetajevan Pradhan ,Thoothukudi ,Geethajevan ,Chief Minister ,Mu. K. ,Stalin ,Kitajeevan ,Social Welfare and Women's Rights Grant Request Debate ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் சரி செய்து தரப்படும்