×

₹3.60 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

இடைப்பாடி, ஜூன் 22: கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் 105 மூட்டை கொப்பரை ₹3.60 லட்சத்திற்கு ஏலம் போனது. முதல் தரம் கிலோ ₹80.75 முதல் ₹89.85 வரையும், இரண்டாம் தரம் ₹42.65 முதல் ₹79.10 வரை ஏலம் போனது. இன்று(22ம் தேதி) பருத்தி, எள் ஏலம் நடைபெறும் என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ₹3.60 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Ethappady ,Tiruchengode Agricultural Producers Cooperative Marketing Society ,Konkanapuram ,Salem ,Namakkal ,Dharmapuri ,Krishnagiri ,Erode ,
× RELATED ₹2.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்