×

கள்ளச்சாராயம் விற்ற தந்தை மகன் கைது

தேன்கனிக்கோட்டை, ஜூன் 22: கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சாவு பிரச்னையை அடுத்து, மாநிலம் முழுவதுமாக போலீசார் சாராய வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையிலான போலீசார், நேற்று அட்டப்பள்ளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற மதியழகன்(51), அவரது மகன் காமராஜ்(29) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

The post கள்ளச்சாராயம் விற்ற தந்தை மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Kallakurichi ,Anchetty Inspector ,Pankajam ,Attapallam ,
× RELATED மாடுகளை திருடிய வழக்கில் 3 பேர் கைது