×

மாடு திருடிய வாலிபர் கைது

தர்மபுரி, ஜூன் 22: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மனைவி லட்சுமி (40). இவர் நேற்று முன்தினம், மாடுகளை அருகேயுள்ள மேய்ச்சல் நிலத்தில் கட்டி வைத்திருந்தார். இந்நிலையில், அங்கிருந்த ஒரு மாட்டை காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் உதவியுடன் தேடியபோது, ஒரு வாலிபர் பாலக்கோடு பிடிஓ அலுவலம் அருகே திருடி செல்வதாக தகவல் கிடைத்தது. தொடர்ந்து அங்கு சென்று மாட்டை திருடிய வாலிபரை பிடித்து, பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பாலக்கோடு எர்ரணள்ளி பகுதியை சேர்ந்த பயாஸ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

The post மாடு திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Lakshmi ,Retiyur ,Palakod ,Dharmapuri district ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது