×

பங்குச்சந்தையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி தனியார் நிறுவன மேலாளர் உள்பட 4 பேரிடம் ₹76.18 லட்சம் மோசடிபுதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி, ஜூன் 22: பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் பிசினெஸ் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி புதுச்சேரி தனியார் நிறுவன மேலாளர் உள்பட 4 பேரிடம் ரூ.76.18 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (44). தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரை மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பி சதீஷ் மர்ம நபர் வழங்கிய லிங்க் மூலம், பங்குச்சந்தை செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் ரூ.56.82 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால், அவருக்கு கிடைத்த லாபத்தை எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.

இதேபோல் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் என்பவரை மர்ம நபர் ெதாடர்புகொண்டு தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால், முதலீடு செய்யும் பணத்திற்கு மாதம் 10 சதவீத வருமானத்தை லாபமாக கொடுப்போம் என்று கூறியுள்ளார். இதை நம்பி ஆல்பர்ட், மர்ம நபர் கூறிய செயலியை பதிவிறக்கம் செய்து, ரூ.19 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அதில் அவருக்கு கிடைத்த லாபத்தை எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் ேமாசடி கும்பலிடம் ஏமாந்தது தெரிந்தது. மேலும் பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த பாவனா ரூ.18 ஆயிரத்தையும், ஏனாம் பகுதியை சேர்ந்த மல்லாடி என்பவர் ரூ.17,500 பணத்தையும் இழந்துள்ளார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பங்குச்சந்தையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி தனியார் நிறுவன மேலாளர் உள்பட 4 பேரிடம் ₹76.18 லட்சம் மோசடிபுதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Murungappakkam… ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி சுப்பையா சாலையில்...