×

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய பாட்டியை தாக்கி கொலை மிரட்டல்

பண்ருட்டி, ஜூன் 22: விருத்தாசலம் பெரிய காப்பான் குளம் கிராமத்தை சேர்ந்தவர் சீத்தாராமன். இவரது மனைவி சந்திரிகா. இவர்களது மகளை பண்ருட்டி அருகே உள்ள பேர் பெரியான்குப்பம் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் வீரமணி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். எதிர்பாராத விதமாக வீரமணியின் மனைவி இறந்து விட்டதால் வீரமணி வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் முதல் மனைவிக்கு பிறந்த தனது மகளுக்கு திருமணம் செய்ய வீரமணி நிச்சயதார்த்தம் நடத்தினார். இதனை அறிந்த சந்திரிகா, பிளஸ் 2 படித்து வரும் தனது பேத்திக்கு குழந்தை திருமணம் நடத்த போவதை கேள்விப்பட்டு வீரமணியிடம் கேட்டு, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரமணி, சந்திரிகாவை அசிங்கமாக திட்டி அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் சந்திரிகா புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வீரமணி மற்றும் இரண்டாவது மனைவி எழில் ராணி ஆகியோர் மீது முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய பாட்டியை தாக்கி கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Panruti ,Seetharaman ,Vridthachalam Periya Kappan Kulam ,Chandrika ,Veeramani ,Periyankuppam ,
× RELATED பண்ருட்டி தர்காவில் 2 குழந்தைகளை விட்டுச்சென்ற தாய்..!!