×

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு திட்டங்களில் இடைத்தரகர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு திட்டங்களில் இடைத்தரகர்கள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கலெக்டர் எச்சரித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்கிறேன் அல்லது பெற்றுத் தருகிறேன் என்று சொல்லி தனி நபரோ, சங்கங்களோ, நிறுவனங்களோ பணம் அல்லது வேறுவகையில் ஆதாயம் பெறும் நோக்கில் செயல்பட்டால் மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாகவே அல்லது 044-29993612 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ புகார்களை தெரிவிக்கலாம். இது தொடர்பான புகார்கள் வரப்பெற்றால் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு திட்டங்களில் இடைத்தரகர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Collector of ,Chennai District ,Collector ,Rashmi Siddharth Jagade ,Chennai District PWD Welfare Department ,
× RELATED செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியை...