×

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் காங். ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்பாட்டம் நடத்தினர்.டெல்லியில் பாஜ அலுவலகத்தின் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கடந்த மே 5ல் நீட் தேர்வு நடந்தது. மொத்தம் 4,750 மையங்களில் நடந்த தேர்வை 24 லட்சம் பேர் எழுதினர்.தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூன் 4ம் தேதி முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் வினாத்தாள் வெளியானது உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை கண்டித்து அரசியல் கட்சிகள். மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று நாடுமுழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் பாஜ தலைமையகம் அருகே திரண்ட காங்கிரஸ் கட்சியினர் நீட் தேர்வு முறைகேடு குறித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. நீட் முறைகேடுகளை கண்டித்து சண்டிகரில் நேற்று காங்கிரசார் ஆர்பாட்டம் செய்தனர். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங் ஆர்பாட்டத்துக்கு தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங் எம்பி,தரம் வீரா காந்தி எம்பி ஆகியோரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

அம்ரீந்தர் சிங் வாரிங் கூறுகையில்,‘‘ மோடி ஆட்சியின் போது தேர்வில் முறைகேடுகள் நடந்தது அம்பலமானது இது முதல் முறை அல்ல. அப்பாவி மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது.பெற்றோர்களும் மாணவர்களும் கவலைப்படுகின்றனர். ஆனால்,இதை பற்றி மோடி ஒரு வார்த்தையும் பேசவில்லை.நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளன.ஆனால் இது போன்ற முறைகேடுகள் நடந்தால் நாடு எப்படி முன்னேற்றம் அடையும்.நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.தரம்வீரா காந்தி,‘‘ மாணவர்களுக்கு நீதி கேட்டு போராடுகிறோம். இது லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது’’ என்றார். இதே போல் பல்வேறு மாநிலங்களில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

The post நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் காங். ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Nationwide ,Congress ,New Delhi ,NEET ,BJP ,Delhi ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு நீதி கோரி நீட்...