×

கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை மேலும் தீவிரமடையும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று (22ம்தேதி) இடுக்கி, மலப்புரம் உள்பட 6 மாவட்டங்களுக்கும், நாளை திருச்சூர், பாலக்காடு உள்பட 6 மாவட்டங்களுக்கும், 24, 25ம் தேதிகளில் கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Thiruvananthapuram Meteorological Center ,Idukki ,Malappuram ,Thrissur ,Palakkad ,
× RELATED கேரளம் ஆக மாறியது கேரளா