×

சிறப்பு மக்கள் நீதிமன்றம் 3 நாட்கள் நடக்கிறது

திண்டுக்கல், ஜூன் 22: திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு சமரசமாக தீர்வு காணும் பொருட்டு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் வரும் 29.07.2024 முதல் 03.08.2024 வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளுக்கு இருதரப்பினரும் சமரசமாக பேசி தீர்வு காணலாம்.

மேற்படி மக்கள் நீதிமன்றத்தின் முன்பு மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் தங்கள் வழக்கறிஞர்கள் உடன் நேரடியாகவோ அல்லது இணையம் (online) வழியாகவோ பங்கு பெறலாம். இதுபற்றிய கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திண்டுக்கல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 0451 – 2460107. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிறப்பு மக்கள் நீதிமன்றம் 3 நாட்கள் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Special People's Court ,Dindigul ,District Legal Affairs Commission ,District Chief Justice ,Muthusaratha ,Supreme Court ,
× RELATED முறையாக கவனிக்காமல் கைவிட்டுச் சென்ற...