×

சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்து தரப்படுமா? பேரவையில் ராஜா எம்எல்ஏ கேள்வி

சென்னை: சட்டப் பேரவையில் சங்கரன் கோவில் எம்.எல்.ஏ ராஜா பேசுகையில் : தென்காசி மாவட்டம் தற்போது தான் தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றம் நியமிக்கப்பட்டுள்ளது. சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்து தரப்படுமா?

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில்: தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் கூடுதலாக அமர்வு நீதிமன்றம் அமைய வேண்டும் என்றால் அதற்கு அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகளும் உயர்நீதிமன்றத்திற்கு கருத்துருகள் அனுப்பப்பட்டு அதனுடைய பரிந்துரையின் அடிப்படையில் அரசு பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சட்டபேரவையில் அமைச்சர் ரகுபதி கூறினார்.

The post சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்து தரப்படுமா? பேரவையில் ராஜா எம்எல்ஏ கேள்வி appeared first on Dinakaran.

Tags : Sankaran Kovil ,Raja ,MLA ,Chennai ,Tenkasi district ,Law Minister ,Raghupathi ,Sankaran Kovil assembly ,Raja MLA ,Dinakaran ,
× RELATED ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவை...