×

ஒன்றிய அரசு புதிதாக நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைத்திடுக: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

மேற்குவங்கம்: ஒன்றிய அரசு புதிதாக நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்களை செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தாவும் 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாரதிய நியாய சன்ஹிதா, நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, சாஷிய அபிதியம் 3 சட்டங்களும் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்றத்தில் 100-க்கு மேற்பட்ட உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து 3 சட்டங்களை நிறைவேற்றியதாக மம்தா புகார் அளித்தார்.

The post ஒன்றிய அரசு புதிதாக நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைத்திடுக: மம்தா பானர்ஜி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : EU government ,Mamta Banerjee ,Tamil Nadu ,Chief Mu. K. ,Mamta ,Stalin ,Bharatiya Niaya Sanhita ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு விவகாரம்; பிரதமர் மோடிக்கு...