×

கள்ளக்குறிச்சி விவகாரம்: தமிழ்நாட்டில் விஷச் சாராயம், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை: தமிழ்நாட்டில் விஷச் சாராயம், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் விஷச் சாராயம், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

The post கள்ளக்குறிச்சி விவகாரம்: தமிழ்நாட்டில் விஷச் சாராயம், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Nadu ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Tamil Nadu ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED முதுநிலை நீட் தேர்வு...