×

கோயம்பேடு மார்க்கெட்டில் பவுர்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு

அண்ணாநகர்: பவுர்ணமியை முன்னிட்டு இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு பகுதியில் பூ மற்றும் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மார்க்கெட்டுக்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதி, வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் பூக்கள் கொண்டு வரப்படுகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை குறைவாக இருந்தது. ஒரு கிலோ மல்லி 350க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை 250க்கும், கனகாம்பரம் 600க்கும், அரளி 100க்கும், சாமந்தி 240 ரூபாய்க்கும், சம்பங்கி 120க்கும், பன்னீர் ரோஸ் 70க்கும், சாக்லேட் ரோஸ் 80க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இன்று காலை அனைத்து பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி 500 ரூபாய்க்கும், கனகாம்பரம் ரூ.800, ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.400, அரளி ரூ.180, சாமந்தி 260க்கும், சம்பங்கி 120க்கும், பன்னீர் ரோஸ் 100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ”கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் அனைத்து பூக்களின் விலை குறைவாக இருந்தது. இன்று பவுர்ணமி என்பதால் மீண்டும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்” என்றார்.

 

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பவுர்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,Annanagar ,Koyambedu ,Pournami ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கோயம்பேடுக்கு வரத்து குறைவு...