×

4.42 கோடி Omeprazole மருந்துகள் கையிருப்பில் உள்ளது: இபிஎஸ்க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

புதுச்சேரி: கள்ளக்குறிச்சிக்கு கூடுதலாக 37 மருத்துவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க கள்ளக்குறிச்சியில் கூடுதலாக 50 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன.

விஷ சாராயம் அருந்தி 3 பெண்கள் உட்பட இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாரயம் விஷ சாராயம் அருந்தி 9 பெண்கள் உட்பட 168 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டோருக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது . வீடுகள் தோறும் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டோரை மருத்துவமனையில் சேர்த்தோம். சிகிச்சை பெற தயங்கிய 55 பேருக்கு மருத்துவமனை அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 600 படுக்கை வசதி கொண்ட கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைக்கு வரத் தயக்கம் காட்டியதால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டன.

பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படக் கூடாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். எரியும் நெருப்பில் குளிர்காயும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் பேச்சு அமைந்துள்ளது. கள்ளச்சாராயத்தின் விஷத்தை முறிக்கும் Omeprazole மருந்து தமிழ்நாட்டிலேயே இல்லை என இபிளஸ் கூறியிருந்தார். 4.42 கோடி Omeprazole மருந்துகள் கையிருப்பில் உள்ளது என இபிஎஸ்க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் விஷ சாராயம் அருந்தி 53 பேர் உயிரிழந்தனர். 2001ல் யாரும் ஜெயலலிதாவை பதவி விலகச் சொல்லவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றசாட்டியுள்ளார்.

 

The post 4.42 கோடி Omeprazole மருந்துகள் கையிருப்பில் உள்ளது: இபிஎஸ்க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் appeared first on Dinakaran.

Tags : EPSC ,Minister ,Ma. Subramanian ,Puducherry ,Kallakurichi ,Minister of Medicine and Public Welfare ,Subramanian ,Dinakaran ,
× RELATED சில செயற்கை கருத்தரித்தல் மையங்கள்...