×

பெரம்பூர் மேம்பாலத்தில் ஓமியோபதி மாணவரை தாக்கி செல்போன் பறிக்க முயற்சி

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி, செல்லப்பா தெருவில் வசிப்பவர் அக்கிலு சமா (22). பெங்களூரில் உள்ள தனியார் ஓமியோபதி கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று மாலை நண்பரை பார்க்க பெரம்பூருக்கு பைக்கில் புறப்பட்டார். பெரம்பூரில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது, செல்போன் அழைப்பு வந்தது. பைக்கை நிறுத்தி விட்டு பேசினார். அந்த நேரத்தில் ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள், அக்கிலுசமாவை வழிமறித்து பணம் கேட்டனர்.

மறுத்ததால் கூர்மையான ஆயுதத்தால் சரமாரி தாக்கி, செல்போனை பறிக்க முயன்றனர். இதில் அவரது முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. அவ்வழியாக வாகனங்கள் வரவே, 2 மர்ம நபர்களும் ஆட்டோவில் தப்பினர். படுகாயம் அடைந்த அக்கிலுசமா பெரம்பூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 7 தையல் போட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்பேரில் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.

 

The post பெரம்பூர் மேம்பாலத்தில் ஓமியோபதி மாணவரை தாக்கி செல்போன் பறிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Perampur ,Correctional Facility ,Akilu Sama ,Chennai Oteri, Selappa Street ,Private Homeopathy College ,Bangalore ,Perambur ,Ambalala ,Dinakaran ,
× RELATED நெருக்கமாக இருந்த புகைப்படத்தை...