×

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் யோகா நிகழ்ச்சியில் பார்வையற்றோர் பங்கேற்பு

மாமல்லபுரம்: உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள யோகா அவசியமாக உள்ளது. யோகா பயிற்சி நமது முன்னோர்கள் உலகிற்கு வழங்கிய அற்புதமான ஒரு கலையாக இன்றளவும் அனைவராலும் பார்க்கப் படுகிறது. யோகா பயிற்சியை தொடந்து செய்து வருவதால் பள்ளி – கல்லூரி மாணவர்கள் கவனச்சிதறல் இல்லாமல் கல்வி கற்கலாம் என கூறப்படுகிறது. யோகாவை தினமும் செய்துவர ஞாபக சக்தி, செயல்திறன் போன்றவை மேம்படுகிறது. முதுகு வலி மன அழுத்தம், பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கிறது. இந்தியாவில் உருவான யோகா கலையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜூன் 21ம்தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கவேண்டும் என ஒன்றிய அரசு சார்பில் கடந்த 2014ம் ஆண்டு ஐநா சபைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆண்டுதோறும் ஜூன் 21ம்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என ஐநா சபை அறிவித்தது. அதன்படி 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21ம்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் தொல்லியல் துறை சார்பில் யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடந்தது. மாமல்லபுரத்தை சேர்ந்த மோகன் என்பவர், பள்ளி மாணவர்கள், பெரியவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் தொல்லியல்துறை ஊழியர்களுக்கு யோகா பயிற்சியை கற்று கொடுத்தார். இதில், பள்ளி மாணவர்கள், பார்வையற்றோர் பங்கேற்பு உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

The post மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் யோகா நிகழ்ச்சியில் பார்வையற்றோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram beach temple complex ,Mamallapuram ,Mamallapuram beach ,temple complex ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை பகுதியில்...