×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.98 கோடி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் மூலம் ரூ.4.98 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மேலும் 3 கிலோ தங்கமும், 54 கிலோ வெள்ளியும் கிடைத்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. கோயில் வசந்த மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

இதில் உண்டியல்கள் மூலம் 4 கோடியே 98 லட்சத்து 7 ஆயிரத்து 405 ரூபாய் கிடைத்துள்ளது. அதேபோல் தங்கம் 3 கிலோ 400 கிராமும், வெள்ளி 54 கிலோ 500 கிராமும், 851 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

 

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.98 கோடி appeared first on Dinakaran.

Tags : Tiruchendur Murugan Temple ,Thiruchendur ,Thiruchendur Subramania Swamy Temple ,Tiruchendur Subramanya Swamy Temple ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயில்...