×

கள்ளக்குறிச்சி விவகாரம் கண்டித்து வரும் 25ம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம்: பிரேமலதா அறிவிப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை கண்டித்து தேமுதிக சார்பில் வரும் 25ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர். இ்த சம்பவத்தை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக வரும் 25ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.

இதில் மாவட்ட கழக செயலாளர்கள், உயர் மட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழக கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

The post கள்ளக்குறிச்சி விவகாரம் கண்டித்து வரும் 25ம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம்: பிரேமலதா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Demudika ,Kallakurichi ,Premalatha ,CHENNAI ,DMUDIKA ,General Secretary of the ,Democratic Party of India ,Premalatha Vijayakanth ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்...