×

சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் : தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை : சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது. கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை தொடர்ந்து மருந்து கடைகளில் சில பொருட்களை வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விதிகளை மீறி தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் , ஆல்கஹால், எத்தனாலை மூலப்பொருளாகக் கொண்ட ஸ்பிரிட், சானிடைசர், ஹேண்ட் வாஸ் ஆகியவற்றை முறைப்படி விற்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள 37,000 மருந்து கடைகளுக்கும் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

The post சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் : தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Drug Dealers Association ,CHENNAI ,Kallakurichi ,Tamil Nadu Drug Vendors Association ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...