×

ரூ.71.86 கோடி மதிப்பில் 10 புதிய தடுப்பணைகள் கட்டப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: ரூ.71.86 கோடி மதிப்பில் 10 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்து வருகின்றனர். அதில் நீர் வளம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நீர்வளத்துறை அமைச்சர் பதில் அளித்தார். நீர்வளத்துறை, இயற்கை வளங்கள், மற்றும் கனிமதுறை இந்த இரண்டின் மீதும் மாமன்றத்தில் விவாதிக்கப்பட்டு பதில் அளித்து வருகிறார்கள்.

ரூ.71.86 கோடி மதிப்பில் 10 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 7 மாவட்டங்களில் ரூ. 55 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி தொடங்கும். புவியியல், சுரங்க ஆணையர் அலுவலகத்தில் உள்ள வீதியில் ஆய்வகம் ரூ.2 கோடி செலவில் மேம்படுத்தி புதுப்பிக்கப்படும். கனிம நிறுவனத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு திறனுடன் கண்காணிப்பு புகைப்பட கருவி கொள்முதல் செய்யப்படும்.

தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஈரோடு காலிங்கராயன் அணைக்கட்டு, நெல்லை பழவூர் அணைக்கட்டு ரூ.3.7 கோடி செலவில் புனரமைக்கப்படும். 4 மண்டலங்களில் 9 மாவட்டங்களில் பழுதான 15 ஏரிகள், கட்டுமானங்களை புனரமைக்க ரூ.69.17 கோடியில் ஒதுக்கீடு செய்துள்ளனர். நவீன நில அளவை கருவிகளை கொண்டு எல்லைக் கற்கள் நடும் பணி ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

 

The post ரூ.71.86 கோடி மதிப்பில் 10 புதிய தடுப்பணைகள் கட்டப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Duraimurugan ,Chennai ,Legislative Assembly ,Tamil Nadu Legislative Process ,Dinakaran ,
× RELATED விளம்பரத்திற்காகவே அதிமுகவினர்...