×

தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் ஒரிரு இடங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் ஜூன் 24-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் ஜூன் 25-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் 25ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வ மையம் அறிவித்துள்ளது. 22ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஜூன் 22-ஆம் தேதி திருப்பூா், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும், ஜூன் 23-இல் திருப்பூா், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜூன் 22,23-ஆகிய தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை, இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

The post தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Meteorological department ,Tamil Nadu ,CHENNAI ,Nilgiris ,Coimbatore ,Tirupur ,Dindigul ,Theni ,Thenkasi ,Nellai ,Kanyakumari ,
× RELATED தமிழ்நாட்டில் 24ம் தேதி வரை மழை நீடிக்கும் வாய்ப்பு