×

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு: கல்வராயன் மலை பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை

கல்வராயன்: கள்ளச்சாராயம் அதிகளவில் புழக்கம் உள்ளதாக கூறப்படும் கல்வராயன் மலை பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை கொண்டனர். 5 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சாதாரண உடையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சோதனை செய்து வருகின்றனர். திருவள்ளூர், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்ட போலீசார் உள்ளூர் போலீசாருக்கு தெரியாமலேயே களத்தில் இறங்கி சோதனை மேற்கொண்டுள்ளனர். கல்வராயன் மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள மாயம்பாடி, வட்டப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் உற்பத்தியாகும் இடமாக அமையும் இடம் தான் இந்த கல்வராயன் மலை. சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் அடர் வனப்பகுதியாக உள்ளது கல்வராயன் மலை. கல்வராயன் மலையில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்து பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் 3 குழுக்களாக பிரிந்து தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் தீவிரமாக கள்ளச்சாராய சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வராயன் மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள மாயம்பாடி, வட்டப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு: கல்வராயன் மலை பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : Kallakurichi Scam ,Kalvarayan Hill ,Kalvarayan ,Thiruvallur ,Thanjai ,Mayiladuthurai ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக...