×

பாலக்காடு நகராட்சி 6வது வார்டில் கழிவுநீர் ஓடைகளை சீரமைக்ககோரி நகராட்சி பொறியாளர் முற்றுகை

பாலக்காடு : பாலக்காடு நகராட்சி 6வது வார்டுக்கு உட்பட் வலியப்பாடம், காரக்காட்டுபரம்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக கழிவுநீர் ஓடையில் சரிவர கழிவுநீர் செல்லாமல் தேங்கி சாலைகளிலும், குடியிருப்பு முன்பாகவும் வழிந்து ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டும், கழிவுநீர் ஓடைகள் அடைப்பாலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து புகார் ஏற்கனவே பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கு அளித்துள்ளனர். இருப்பினும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகள் அதிகாரிகள் மேற்கொள்ளாமல் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று கழிவுநீர் ஓடைகளை சீரமைக்கக்கோரி 6வது வார்டு பொதுமக்கள் பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் பொறியாளரை முற்றுகையிட்டு கோரிக்கை முனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து நகராட்சி பொறியாளர் மற்றும் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுவதாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்களது கலைந்து சென்றனர்.

இதில் பிளாக் காங்கிரஸ் தலைவர் சதீஷ், மண்டலம் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், நகராட்சி பார்லிமென்டரி கட்சி துணைத்தலைவர் கிருஷ்ணன், கவுண்சிலர் ஜித்குமார், ராமகிருஷ்ணன், குமார், சுரேஷ், சுதாதேவி, மணிகண்டன், சரஸ்வதி சஞ்ஜெய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பாலக்காடு நகராட்சி 6வது வார்டில் கழிவுநீர் ஓடைகளை சீரமைக்ககோரி நகராட்சி பொறியாளர் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Palakkad Municipality ,6th Ward ,Palakkad ,Valiyapadam ,Karakattuparambu ,Dinakaran ,
× RELATED ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் பழுதான...