×

சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் 20 நாட்களில் ₹1.52 கோடி உண்டியல் காணிக்கை

*80 கிராம் தங்கம், ஒரு கிலோ வெள்ளியும் கிடைத்தது

சித்தூர் : சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் 20 நாட்களில் பக்தர்கள் ₹1.52 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டது. சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீகாணிப்பாக்கம் வர சித்தி விநாயகர் கோயில். இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். அவ்வாறு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வரும்போது தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலில் உள்ள உண்டியலில் தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தி செல்கிறார்கள்.

அவ்வாறு பக்தர்கள் கோயிலில் உள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணத்தை கோயில் நிர்வாகம் சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். அவ்வாறு நேற்றுமுன்தினம் கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் பக்தர்கள் 20 நாட்களில் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணத்தை கோயில் அருகே உள்ள ஆஸ்தான மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயில் ஊழியர்கள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் 20 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் ரூ.1 கோடியே 52 லட்சத்து 94 ஆயிரத்து 363 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளார்கள். அதேபோல் தங்கம் 80 கிராம், வெள்ளி ஒரு கிலோ, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளார்கள். அதேபோல் கோ பராமரிப்புக்கு வைக்கப்பட்ட உண்டியலில் ₹10,376 காணிக்கையாக செலுத்தி உள்ளார்கள்.

அன்னதானத்திற்கு வைக்கப்பட்ட உண்டியலில் 27 217 வெளிநாட்டு பணம், அமெரிக்கா – 904, டாலர்கள், ஆஸ்திரேலியா – 50, டாலர்கள் சிங்கப்பூர் – 2 டாலர்கள் மலேசியா 25, ரிங்ஸ் என பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார்கள் என அதிகாரப்பூர்வமாக கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

இதில் கோயில் இணை செயல் அலுவலர்கள் ரவீந்திரபாபு, எஸ்.வி. கிருஷ்ணா, வித்யாசாகர், தனஞ்சய, மேற்பார்வையாளர்கள் – கோதண்டபாணி, ஸ்ரீதர் பாபு, பாலரங்கசாமி, மல்லிகார்ஜூனா, தேவஸ்தான ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் 20 நாட்களில் ₹1.52 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Chittoor Kannappakkam Varasidhi Vinayagar ,Temple ,Chittoor ,Chittoor Ganesha temple ,Srikanipakkam… ,Chittoor Kanipakkam ,Chittoor Vinayagar Temple ,
× RELATED சித்தூர் டாப் லைன் பகுதியில் குண்டாலம்மன் கோயில் திருவிழா கோலாகலம்