*தார்சாலை அமைக்க கோரிக்கை
புதுச்சேரி : புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.31 கோடி செலவில் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க, பேருந்து நிலையத்தை தற்காலிகமாக ஏஎப்டி மைதானத்துக்கு இடமாற்றம் செய்து கடந்த 16ம் தேதி முதல் பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து செல்கின்றன. இந்நிலையில் தற்காலிக பேருந்து நிலையத்தில் பேருந்து செல்லும் வழித்தடத்தில் சாலை வசதி இல்லாததால், மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாற வாய்ப்புள்ளதாக ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி முழுவதும் சூறைகாற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் ஏஎப்டி மைதானத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் மழைநீர் ேதங்கியது. அப்போது பேருந்துகள் சென்று வந்ததால், பேருந்து நிலையம் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.
மேலும் இரவில் மின்தடை ஏற்பட்டதால், தற்காலிக பேருந்து நிலையம் இருளில் மூழ்கியது. சிறு மழைக்கே தாக்குப்பிடிக்காத தற்காலிக பேருந்து நிலையம் இனிவரும் பருவமழைக்கு எப்படி தாக்குபிடிக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தற்காலிக பேருந்து நிலையத்தில் பேருந்துகள் செல்லும் வழித்தடத்தில் தார்சாலை அமைக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நேற்று முன்தினம் பெய்த மழையால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் தற்காலிக பேருந்து நிலையம் appeared first on Dinakaran.