×

பள்ளி மாணவி, இளம்பெண் மாயம்

புதுச்சேரி : புதுச்சேரி வில்லியனூர் சுல்தான்பேட்டை ராஜா நகர் அருண் நகரை சேர்ந்த முகமது ரபீக் மகள் அப்ரா (15). பள்ளி மாணவியான இவர், கடந்த 5ம் தேதி மாலை வீட்டில் இருந்து டியூசனுக்கு சென்றார். அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. காணாமல் போன அன்று அப்ரா, சிமென்ட் நிற சுடிதார், கருப்பு நிற புர்க்காவும், ஷாலும் அணிந்திருந்தார். மேலும், பச்சை நிற ஸ்கூல் பேக்கும் எடுத்து சென்றுள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான அப்ராவை தேடி வருகின்றனர்.

இதேபோல், வில்லியனூர் பெரம்பை ரோடு எப்.என். நகரை சேர்ந்தவர் வேலு மகள் திவ்யா (19). கடந்த 17ம் தேதி இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்து சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. மாயமான அன்று அவர், சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன திவ்யாவை தேடி வருகின்றனர்.

The post பள்ளி மாணவி, இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Abra ,Mohammad Rafiq ,Arun Nagar ,Raja Nagar ,Villayanur Sultanpet ,Tucson ,Mayam ,
× RELATED புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சரக்கு வாகன டிரைவர்கள்