×

தொப்பூர் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: தொப்பூர் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் தொடங்கியது. அதிமுக , பாமக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை புரிந்தனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவை சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பின்பு சட்டப்பேரவை தொடங்கியது.

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அப்போது உறுப்பினர் எஸ்.பி வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார். தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்தை இணைக்கும் தொப்பூர் கணவாய் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தருமபுரி மாவட்டத்தில் 5 கிலோமீட்டரும், சேலம் மாவட்டத்தில் 1.6 கிலோமீட்டரும் மொத்தம் 6.60 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலையை உயர்மட்ட பாலமாக அமைக்கும் பணியை 906 கோடி மதிப்பீட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாசலையும் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.

இப்பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. 2027ம் ஆண்டுக்குள் இந்த பணியை முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தருமபுரி மையப்பகுதியில் பாலம் அமைப்பதற்கான கோரிக்கை குறித்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தருமபுரிக்கு கிழக்கு பகுதியில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை நகரில் பல்வேறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.

 

The post தொப்பூர் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Thopur Road ,Minister ,AV Velu ,CHENNAI ,State ,Works ,Toppur Road ,Tamil Nadu Legislative Assembly ,AIADMK ,Dinakaran ,
× RELATED கட்டுமான பொருள் விலை, தினக்கூலி விவரம்...