×

உடல் வலியை போக்க சாராயம் குடித்த தம்பதி பலியான சோகம்

*கண்ணீருடன் தவிக்கும் குழந்தைகள்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த தம்பதியான சுரேஷ் (40), வடிவுக்கரசி (32) ஆகியோர் விஷ சாராயம் குடித்து பாிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து வந்த நிலையில், ஹரி(14), ராகவன்(13) என்ற 2 மகன்களும், கோகிலா (16) என்ற மகளும் உள்ளனர். அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் தம்பதி உடல்வலியை போக்குவதற்காக வழக்கமாக மதுகுடிப்பது வழக்கம்.

அதேபோல் 18ம்தேதி வேலையை முடித்துவிட்டு திரும்பிய தம்பதியர் உடல்வலியை போக்குவதற்காக இரவு சாராயம் வாங்கி குடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டில் படுத்திருந்த தம்பதிக்கு உடல்நிலை பாதிக்கப்படவே, உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் 3 குழந்தைகளும் அனாதையாக நேற்று இறுதிச் சடங்கின்போது சோகத்துடன் நின்ற நிலையில் அவர்களை ஆறுதல்படுத்திய உறவினர்கள், ‘உடல்வலி போக்க சாராயம் குடித்தவர்கள்… இப்படி குழந்தைகளை அனாதையாக விட்டுவிட்டு சென்று விட்டார்களே…’ என கதறி அழுதனர்.

The post உடல் வலியை போக்க சாராயம் குடித்த தம்பதி பலியான சோகம் appeared first on Dinakaran.

Tags : Suresh ,Vadyukkarasi ,Kallakurichi Karunapuram Metuth Street ,Hari ,Raghavan ,
× RELATED திண்டுக்கல் ராஜக்காபட்டியில்...