×

விருதுநகர் அருகே எலி அட்டையில் மைனா வேட்டை

*4 பேர் சிக்கினர்

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் அருகே எலி அட்டையை பயன்படுத்தி மைனாக்களை வேட்டையாடிய 4 பேர் சிக்கினர். 17 மைனாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.விருதுநகர் பாவாலி அருகே உள்ள கருப்பன்பட்டி கண்மாயில் பறவைகளை வேட்டையாடுவதாக வன பாதுகாப்பு படை ஏசிஎப் மலர்கண்டனுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ரேஞ்சர் கார்த்திக், பாரஸ்டர் செந்தில் ராகவன் தலைமையிலான வன பாதுகாப்பு படையினர் கண்மாய் பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது எலி அட்டையை பயன்படுத்தி சிலர் மைனாக்களை வேட்டையாடி கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்த வன பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த ராஜதுரை(28), அழகர்(40), பாக்யராஜ்(35) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்களை பிடித்த வனத்துறையினர், 17 மைனாக்களை பறிமுதல் செய்து பறக்கவிட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விருதுநகர் அருகே எலி அட்டையில் மைனா வேட்டை appeared first on Dinakaran.

Tags : Myna ,Virudhunagar ,Srivilliputhur ,Forest Conservation Force ,ACF ,Karuppanpatti ,Virudhunagar Bawali ,
× RELATED பொருளாதாரத்தில்...