×

ஓராண்டில் விஷச்சாராய விற்பனை தொடர்பாக காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன ? : ஐகோர்ட் கேள்வி

சென்னை : தமிழகத்தில் ஓராண்டில் விஷச்சாராய விற்பனை தொடர்பாக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. விஷச்சாராய விற்பனையால் நடந்துள்ள இந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஐகோர்ட் வேதனை தெரிவித்தது. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் விஷச்சாராயம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை? என்றும் ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். அரசு தரப்பு விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

The post ஓராண்டில் விஷச்சாராய விற்பனை தொடர்பாக காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன ? : ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Orant ,iCourt ,Chennai ,Orandil Vishacharaya ,Tamil Nadu ,Vishcharaya ,Aycourt Adanai ,Dinakaran ,
× RELATED மறுகூட்டல் விண்ணப்பம்..அரசு வழங்கும்...