×

விருதுநகரில் அதிகாலை பரபரப்பு பிரிட்ஜ் வெடித்து வீடு தீ பிடித்தது

*தாய், மகள் உயிர் தப்பினர்

விருதுநகர் : விருதுநகரில் நேற்று அதிகாலை வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் தாய், மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே காந்திபுரம் தெருவை சேர்ந்தவர் மாரீஸ்வரி(55). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டிலிருந்த பிரிட்ஜ் திடீரென வெடித்து சிதறி தீ பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாரீஸ்வரி தனது மகளுடன் உடனடியாக வீட்டிலிருந்து வெளியே தப்பியோடினார். பின்னர், அந்தப் பகுதியினரின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால், தீ வீடு முழுவதும் பரவிய நிலையில் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து விருதுநகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் பாலமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால், காந்திபுரம் தெரு மிகவும் குறுகலானது என்பதால் தீயணைப்பு வாகனம் உள்ளே செல்ல முடியவில்லை. அதற்குள் வீடு முழுவதும் தீ பரவி பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. பின்னர் தீயணைப்பு வீரர்கள் குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டிலிருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post விருதுநகரில் அதிகாலை பரபரப்பு பிரிட்ஜ் வெடித்து வீடு தீ பிடித்தது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Mariswari ,Gandhipuram Street ,Virudhunagar Old Bus Station ,
× RELATED பொருளாதாரத்தில்...