×

ஜனநாயக முறைப்படி பேரவை நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: ஜனநாயக முறைப்படி பேரவை நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அப்போது; விஷச் சாராயம் விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். 2001-ல் பண்ருட்டியில் நடந்த கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் உயிரிழந்தனர். 2001-ல் பண்ருட்டியில் விஷச் சாராயம் குடித்து 200-க்கும் மேற்பட்டோர் கண் பார்வை இழந்தனர்.

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன். ஜனநாயக முறைப்படி பேரவை நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். குழப்பம் விளைவிக்க முயன்றதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சியினர் பேச வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவன் நான்.

அவையில் இன்று ஒரு நாள் பங்கேற்க கூடாது என்று சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவினர் அவையில் பேச அனுமதிக்க வேண்டும் என முதல்வர் கூறினார். முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று அவை நடவடிக்கையில் பங்கேற்க அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். அனால் அவை நிகழ்வில் பங்கேற்கவில்லை என அதிமுக அறிவித்துள்ளது. தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் இருந்து புறப்பட்டார்.

The post ஜனநாயக முறைப்படி பேரவை நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Mu. K. Stalin ,Chennai ,Chief Minister ,K. Stalin ,Kallakurichi ,Kalalakurichi ,
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...