×

விஷச் சாராய விவகாரம் தொடர்பாக பேரவையில் தொடர் அமளி : அதிமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவு

சென்னை : தமிழக சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் தொடங்கியது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இருக்கையில் அமருமாறு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார். கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, விஷச் சாராய விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

The post விஷச் சாராய விவகாரம் தொடர்பாக பேரவையில் தொடர் அமளி : அதிமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,AIADMK MLAs ,Legislative Assembly ,Kallakurichi ,Speaker ,Appavu ,Dinakaran ,
× RELATED சட்டப்பேரவையில் கடும் அமளி: அதிமுக...