×

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்தவர்களில்45 பேர் மரணம்: அரசு மருத்துவமனை அறிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 45 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என அரசு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி சேலம் அரசு மருத்துவமனை விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 45 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என அரசு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். விஷச்சாராயம் குடித்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 159 பேரில் 45 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 24 பேர், ஜிப்மரில் 3 பேர், சேலம் மருத்துவமனையில் 14 பேர் என மொத்தம் 45 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சியில் 64 பேர், சேலத்தில் 32 பேர், ஜிப்மரில் 16 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 159 பேரில் 45 பேர் இறந்த நிலையில் 114 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

The post கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்தவர்களில்45 பேர் மரணம்: அரசு மருத்துவமனை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Vishcharayam ,Kalalakurichi ,KALACHARAYAM ,KALLAKURICHI KARUNAPURAM ,Kalakurichi Salem Government Hospital Viluppuram ,Government Hospital ,
× RELATED கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில்...