×

நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

 

நாகப்பட்டினம்,ஜூன்21: சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வசதியாக சம்பந்தப்பட்ட இதர நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் இன்று (21ம் தேதி) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கூட்டரங்கில் நடைபெறுகிறது.

இதில் சம்பந்தப்பட்ட தொடர்பு துறைகளும் ஒருங்கிணைந்து முகாம் நடைபெறும் நாளில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அனைத்து திருநங்கைகளும் தவறாமல் கலந்துகொண்டு பயன் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்னிவீர்...