×

சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

 

மயிலாடுதுறை,ஜூன் 21: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உமையாள்பதி கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் ராமு மகன் ரஞ்சித் (23). இவர் மயிலாடுதுறை அருகே உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ரஞ்சித் திடீரென ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அந்த வீட்டினுள் தனியாக இருந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டுள்ளார். கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனைக் கண்ட ரஞ்சித் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்ரியா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Bocso ,Mayiladuthurai ,Ramu Makan Ranjith ,Umayalpati ,Sirkazhi, Mayiladuthurai district ,Ranjith ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...