- பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி
- திருப்பூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- இளைஞர் நலன்
- விளையாட்டு அபிவிருத்தி
- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- அன்பில் மஹேஸ்போய்யாமோஷி
- பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
திருப்பூர், ஜூன்21: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை, இருபாலரும் படிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியாக செயல்பட தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உத்தரவிட்டனர்.
இதற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் பரிந்துரை செய்தனர்.இதனைத்தொடர்ந்து பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஈ.தங்கராஜ் மாணவமாணவிகள் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வேலுச்சாமி,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசாமி, பள்ளிபாளையம் சண்முகம் மற்றும் ஆசிரியர்கள், மாணவமாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
The post பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை appeared first on Dinakaran.