×

பூங்காவில் பச்சை நிற ரோஜா

 

ஊட்டி, ஜூன் 21: ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்துள்ள பச்சை நிற ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் உள்ளன. சுமார் 50 ஆயிரம் செடிகள் இங்கு உள்ளன. ஒவ்வொரு செடியிலும், வெவ்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும். இது தவிர நாட்டு வகை ரோஜா, காடுகளில் காணப்படும் ரோஜா செடிகள் என பல வகையான ரோஜா செடிகள் உள்ளன.

பச்சை நிற ரோஜா மலர்கள் சற்று அரிதாகவே காணப்படும். இவ்வகை மலர்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த அரிய வகை வண்ணம் கொண்ட ரோஜா மலர்களை கண்டு ரசித்து செல்வது வழக்கம். இம்முறையும் வழக்கம் போல் ரோஜா பூங்காவில் அரிய வகை பச்சை நிற ரோஜா மலர்கள் பூத்துள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

The post பூங்காவில் பச்சை நிற ரோஜா appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Rose Park ,Dinakaran ,
× RELATED புலி நடமாட்ட தகவலால் தடை...