×

மேலூர் அரசு பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்

 

ஊட்டி, ஜூன் 21: ஊட்டி அருகே மேலூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் மாணவிகளுக்கு விசு கல்வி மற்றும் பொது நல அறக்கட்டளை சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பிரேமா தலைமை வகித்தார். அர்ஜூனன் வரவேற்று பேசினார். வட்டார கல்வி அலுவலர்கள் யசோதா, மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விசு கல்விஅறக்கட்டளை நிறுவனத்தலைவர் கைகாட்டி சுப்ரமணி கல்வி உபகரணங்கள் வழங்கினார். விழாவில், சமூக சேவகர் தமிழரசன் அறக்கட்டளை நிர்வாகிகள் ராமச்சந்திரன், சரவணன், பள்ளி ஆசிரியர்கள் சரஸ்வதி, சுமதி, சபீனா மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். ஆசிரியர் திலகவதி நன்றி கூறினார்.

The post மேலூர் அரசு பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் appeared first on Dinakaran.

Tags : Melur Govt School ,Ooty ,Panchayat Union Middle School ,Melur ,Visu Education ,Public Welfare Foundation ,Headmaster ,Prema Chief ,Melur Government School ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் அருகே சேத்திருப்பு...